நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க.வினருக்கு விருப்ப மனுக்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவினருக்கு விருப்ப மனுக்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
தூத்துக்குடி:
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர் (திருச்செந்தூர் நகராட்சி நீங்கலாக) ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காயல்பட்டணம் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் வார்டு கவுன்சிலர் பொறுப்பிற்கும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி வட்டங்களில் கவுன்சிலர் பொறுப்பிற்கும் போட்டியிட விரும்பும் தெற்கு மாவட்ட தி.மு.கவினர்க்கு நேற்று விருப்பமனுக்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி எட்டையபுரம் சாலை கே.டி.சி.நகரில் உள்ள தெற்கு மாவட்டக் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு விருப்ப மனுக்களை கட்சியினருக்கு வழங்கினார்.
மாநகராட்சி வார்டு உறுப்பினர்களு ரூ.10 ஆயிரமும், நகராட்சி வார்டுளுக்கு ரூ.5 ஆயிரமும், பேரூராட்சி வார்டுகளுக்கு ரூ.2 ஆயிரத்து 500 ம் கட்டணமாக வாங்கப்பட்டது. இந்த விருப்ப மனுக்களை மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு வந்து தி.மு.க.வினர் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
இதில் சண்முகையா எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி ராமஜெயம், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story