மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 30ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என எம்ஆர்காந்தி எம்எல்ஏ தெரிவித்தார்
மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 30ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என எம்ஆர்காந்தி எம்எல்ஏ தெரிவித்தார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் பா.ஜனதா சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தூத்துக்குடி உள்ள தனியார் திருமணமண்டபத்தில் மாநில மகளிர் அணி தலைவர் மீனாட்சி நித்ய சுந்தர், தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ ஆகியோரின் முன்னிலையில் தெற்கு மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. இந்த நிகழ்ச்சி தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமையில் ப.ஜனதா கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:- பா.ஜனதா கட்சி வரும் உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு பெட்ரோலுக்கு ரூ.5-ம், டீசலுக்கு ரூ.3-ம் குறைப்பதாக கூறினார்கள். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் தி.மு.க. அரசு எடுக்க வில்லை. மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்த பின்பும் மாநில அரசு குறைக்காமல் இருப்பது மாநில அரசின் மெத்தனபோக்கை காட்டுகிறது.
போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதை பார்க்கும் போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக இருக்கிறது. குமரியில் வெள்ளம் ஏற்பட்டபோது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு சில இடங்களுக்கு மட்டும் சென்று பார்வையிட்டார். அதிகமான இடங்கள் வெள்ளத்தால் சேதம் அடைந்திருக்கிறது. ஆனால் குறைவான நிவாரணமே தமிழக அரசு ஒதுக்கி இருக்கிறது. ஒவ்வொரு ஏக்கருக்கு குறைந்தது ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் குறைந்தது ரூ.5 ஆயிரமாவது வழங்க வேண்டும் என்று தமிழக அரசை பா.ஜனதா வலியுறுத்துகிறது என்று கூறினார்.
Related Tags :
Next Story