வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1,563 பேர் மனு
தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2 நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் 1,563 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தேனி:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பான பணிகளுக்காக வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் கடந்த 1-ந்தேதி முதல் நடந்து வருகிறது. இதற்காக கடந்த 13, 14-ந்தேதிகளில் சிறப்பு முகாம் நடந்தது. இந்த நாட்களில் மோசமான வானிலை காரணமாக சிறப்பு முகாம்கள் நடத்துவதில் இடையூறுகள் ஏற்பட்டன.
இதனால், தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, பொதுமக்கள் வசதிக்காக நேற்று முன்தினமும், நேற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கூடுதல் சிறப்பு முகாம்கள் நடந்தன. நேற்று தேனி, பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி ஆகிய இடங்களில் நடந்த முகாம்களை மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 2 நாட்கள் நடந்த இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1,563 மனுக்கள், பெயர் நீக்கம் செய்ய 838 மனுக்கள், திருத்தம் செய்ய 231 மனுக்கள், முகவரி மாற்றம் செய்ய 302 மனுக்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 934 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து வருகிற 27, 28-ந்தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.
Related Tags :
Next Story