நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்பனை


நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்பனை
x
தினத்தந்தி 21 Nov 2021 11:20 PM IST (Updated: 21 Nov 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்பனை

நாமக்கல்:
நாமக்கல் உழவர் சந்தையில் வரத்து குறைவு காரணமாக நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனையானது.
உழவர் சந்தை
நாமக்கல்- கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று 17¼ டன் காய்கறிகள் மற்றும் 4½ டன் பழங்கள் விற்பனைக்கு வந்திருந்தன. இவை ரூ.9 லட்சத்து ஆயிரத்து 10-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 3,360 பேர் வாங்கி சென்றனர்.
விலை விவரம்
நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.90-க்கும், கத்தரி கிலோ ரூ.100-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.60-க்கும், புடலங்காய் கிலோ ரூ.70-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.30-க்கும், பீட்ரூட் கிலோ ரூ.52-க்கும், கேரட் கிலோ ரூ.69-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.72-க்கும், முட்டைக்கோஸ் கிலோ ரூ.23-க்கும், இஞ்சி கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
சின்ன வெங்காயம் கிலோ ரூ.45-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.45-க்கும் விற்பனை செய்யப்பட்டன. தக்காளி கடந்த வாரத்தை காட்டிலும் கிலோவுக்கு ரூ.30 அதிகரித்து விற்பனையானது.
விளைச்சல் குறைவு
தொடர்மழை காரணமாக பூக்கள் உதிர்ந்து தக்காளி விளைச்சல் குறைந்து உள்ளது. அதனால் வரத்து குறைந்து உள்ள நிலையில், அடுத்தடுத்து சுபமுகூர்த்த நாட்கள் வருவதால் தக்காளிக்கான தேவை அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கு காரணம் என உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story