பீடி குடித்தபோது தீக்காயம் அடைந்த முதியவர் சாவு


பீடி குடித்தபோது தீக்காயம் அடைந்த முதியவர் சாவு
x
தினத்தந்தி 21 Nov 2021 11:43 PM IST (Updated: 21 Nov 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

பீடி குடித்தபோது தீக்காயம் அடைந்த முதியவர் இறந்தார்.

கரூர்
கரூர் அருகே உள்ள ராம கவுண்டன்புதூரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 65). இவர் பீடி குடிப்பதற்காக அதனை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிடியிலிருந்த நெருப்பு அவர் கட்டியிருந்த லுங்கியில் பட்டு தீப்பிடித்துள்ளது. பின்னர் மளமளவென சீனிவானின் உடல் மீது பரவியது. இதனால் தீக்காயம் அடைந்த சீனிவாசன் அலறி துடித்தார். இதைக்கண்ட அவரது உறவினர்கள் தீக்காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீனதயாளன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story