கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 21 Nov 2021 11:47 PM IST (Updated: 21 Nov 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

கரூரில் செல்போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்
கல்லூரி மாணவி
அரியலூரை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி பவானி. இந்த தம்பதி கரூர் வெங்கமேடு பகுதிக்குட்பட்ட வி.வி.ஜி. நகர் பகுதியில் தங்கி உள்ளனர். மோகன் டெய்லராகவும், பவானி டெக்ஸ்டைல் நிறுவனத்திலும் பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய இளைய மகள் கிருத்திகா (வயது 19). இவர் ஆட்டையாம்பரப்பு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கிருத்திகா அதிக அளவில் செல்போன் பயன்படுத்தி கேம் விளையாடி வந்ததாக தெரிகிறது.
தற்கொலை
இதனால் கிருத்திகாவை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த கிருத்திகா நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் கிருத்திகாவை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கிருத்திகாவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீசார் கிருத்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கிருத்திகாவின் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story