பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள்தண்டனை


பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள்தண்டனை
x
தினத்தந்தி 21 Nov 2021 11:51 PM IST (Updated: 21 Nov 2021 11:51 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள்தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டில் உத்தரவிடப்பட்டது.

சிவகங்கை, நவ.22-
பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள்தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டில் உத்தரவிடப்பட்டது.
அடிக்கடி தகராறு
சிவகங்கை நகர் டீ புதூர் பிள்ளையார் கோவில் முதல் தெருவை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது32). இவரும் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பெருமாள் புரத்தை சேர்ந்த துரைராஜ் (45) என்பவரும் கணவன் மனைவியாக வாழ்ந்துவந்தனர். 
துரைராஜ்  கார்பென்டராக தொழில் செய்துவந்தார். இந்தநிலையில் உமாமகேசுவரியின் நடத் தையில் சந்தேகப்பட்ட துரைராஜ் அவருடன் அடிக்கடி தகராறு செய்துவந்தாராம். கடந்த 2014-ம் வருடம் ஏப்ரல் மாதம் 27-ந் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த துரைராஜ் அரிவா ளால் உமாமகேஸ்வரியை வெட்டினார். 
படுகாயம் அடைந்த உமாமகேஸ்வரியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதுதொடர்பாக அப்போது இருந்த சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தி துரைராஜை கைது செய்து வழக்கு பதிவு செய்தார். அவர் மீது சிவகங்கையில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அபராதம்
 வழக்கை விசாரணை செய்த மாவட்ட செசன்ஸ் நீதிபதி சுமதி சாய்பிரியா குற்றம் சாட்டப்பட்ட துரைராஜக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் ரூ.10 ஆயிரம்  அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

Next Story