ஆம்பூர் அருகே குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் சாலை மறியல்


ஆம்பூர் அருகே  குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Nov 2021 12:08 AM IST (Updated: 22 Nov 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த வெள்ளநீரை அகற்றாததால் நேற்று பொதுமக்கள் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். 7 மணிநேரம் இந்த போராட்டம் நடந்தது

ஆம்பூர்

ஆம்பூர் அருகே குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த வெள்ளநீரை அகற்றாததால் நேற்று பொதுமக்கள் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். 7 மணிநேரம் இந்த போராட்டம் நடந்தது

சாலை மறியல்

ஆம்பூரில் தொடர் மழை காரணமாக ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்தநிலையில் ஆம்பூரை அடுத்த துத்திபட்டு ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதை கண்டித்து சில தினங்களாக அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 அப்போது எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். உடனடியாக பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய்கள் தூர்வாரும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் வடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

7 மணி நேரம் நடந்தது

தகவலறிந்து வந்த உமராபாத் போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக மறியல் நடந்ததால் போக்குவரத்து பாதிப்படைந்தது. இரவு சுமார் 8 மணியளவில் மறியல் கைவிடப்பட்டது.

இதேபோல் மாதனூர் பஸ் நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் வெள்ள நீரை வெளியேற்றாததால் பாதிப்படைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story