திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு
திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்கப்பட்டார்.
திருவையாறு:-
திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்கப்பட்டார்.
குளிக்க சென்ற மூதாட்டி
அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த காரைப்பாக்கத்தை சேர்ந்த பழனிசாமி மனைவி மூக்காயி (வயது72). இவர் நேற்று காரைப்பாக்கம் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக இறங்கும்போது தடுமாறி விழுந்தார். இதில் அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.
இதை பார்த்த பொதுமக்கள் திருமானூர் சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து திருவையாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருவையாறு தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஆரோக்கியதாஸ், பிரபாகரன், சண்முகம், கார்த்திக் ஆகியோர் அங்கு விரைந்து சென்று கொள்ளிடம் ஆற்றில் இறங்கி மூதாட்டியை மீட்கும் முயற்சியை மேற்கொண்டனர்.
மீட்பு
அங்கு உள்ள திடீர் நகர் பகுதியில் மிதந்து வந்த மூக்காயியை மிதவை உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு திருமானூர் கரைக்கு கொண்டு வந்தனர். உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமானூர் அரசு ஆஸ்பத்திரிக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
கரைபுரண்டு ஓடும் கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டியை பத்திரமாக மீட்ட திருவையாறு தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story