மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது


மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
x
தினத்தந்தி 22 Nov 2021 12:35 AM IST (Updated: 22 Nov 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி அருகே மோட்டார்சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மாசானம் (வயது 45). இவர் கடந்த 7-ந்தேதி தனது வீட்டின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதனை மர்ம நபர் திருடிச் சென்று விட்டார்.
இதுகுறித்து நாங்குநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை திருடியதாக களக்காடு நடுத்தெருவை சேர்ந்த நெல்சன் ராஜா (46) என்பரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Next Story