700 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


700 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 22 Nov 2021 12:38 AM IST (Updated: 22 Nov 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் 700 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் 700 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.

10-வது கட்ட முகாம்

தமிழகத்தில் நேற்று 10-வது கட்டமாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் நேற்று 700 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. நெல்லை மாநகரில் மட்டும் 172 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகர் ஆஸ்பத்திரியில் இளம்பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இதுதவிர வீடு, வீடாக சென்றும் விடுபட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. குறிப்பாக முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டு 2-வது தவணை தடுப்பூசி போடாமல் இருந்தவர்களை தொடர்பு கொண்டு தடுப்பூசி செலுத்தினர். 2-வது தவணை தடுப்பூசிக்கு நேற்றைய முகாமில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

வீடு, வீடாக சென்று

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நெல்லை மாநகர பகுதியில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டு உள்ளனர். இதில் 2-வது தவணை தடுப்பூசி பலர் போடவில்லை. அவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண் மூலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாநகரில் 5.40 லட்சம் பேர் உள்ளனர். அதில் 18 வயதுக்கு மேல் 4 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 2.50 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.30 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். 1.20 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்படும்’’ என்றனர்.

Next Story