மாவட்ட செய்திகள்

கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் தகராறு; 2 பேர் மீது வழக்கு + "||" + Dispute over repayment of loan given; Case against 2 people

கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் தகராறு; 2 பேர் மீது வழக்கு

கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் தகராறு; 2 பேர் மீது வழக்கு
கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொட்டியம்:
தொட்டியம் அருகே உள்ள அலகரை மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் வடிவேல்(வயது 50). இவர் நேற்று மணமேடு பஸ் நிறுத்தம் அருகே நின்றபோது, அந்த வழியாக வந்த மணமேடு கிராமத்தை சேர்ந்த ரவி(55) என்பவரிடம், தான் கடனாக கொடுத்த ரூ4 ஆயிரத்தை வடிவேல் திரும்ப கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் குச்சியாலும், கட்டையாலும் தாக்கிக்கொண்டனர். இதில் ரவியின் ஸ்கூட்டரை வடிவேல் அடித்து உடைத்ததாக தெரிகிறது. இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட காயம் காரணமாக இருவரும் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வடிவேல் மற்றும் ரவி இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில் தொட்டியம் போலீசார் வடிவேல் மற்றும் ரவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சாலை மறியலில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 100 பேர் மீது வழக்கு
சாலை மறியலில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2. முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு வழக்கு-வருவாய்த்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு வழக்கில் பதில் அளிக்க வருவாய்த்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
3. நீக்கப்பட்ட வரிகளை சேர்த்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முழுமையாக பாட கோரிய வழக்கு தள்ளுபடி
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் நீக்கப்பட்ட வரிகளை சேர்த்து முழு பாடலையும் பாடவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. சங்கராபுரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது வழக்கு
சங்கராபுரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது வழக்கு
5. அனுமதியின்றி மாரத்தான் போட்டி நடத்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் 30 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி மாரத்தான் போட்டி நடத்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் 30 பேர் மீது வழக்கு