மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பலி
கீரிப்பாறை அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் பாய்ந்து என்ஜினீயர் பரிதாபமாக பலியானார்.
அழகியபாண்டியபுரம்:
கீரிப்பாறை அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் பாய்ந்து என்ஜினீயர் பரிதாபமாக பலியானார்.
என்ஜினீயர்
கீரிப்பாறை அருகே உள்ள சுருளோடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார், லாரி ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவருடைய மகன் குமரேச பிரசாத் (வயது 22). இவர், டிப்ளமோ சிவில் என்ஜினீயர் படித்து விட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலையில் நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்
பலி
அப்போது தடிக்காரன்கோணம் சி.எம்.எஸ். பஸ் நிறுத்தம் பகுதியில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. இதில், பலத்த காயமடைந்த குமரேச பிரசாத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கீரிப்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story