கே.வி.குப்பம் அருகே பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்


கே.வி.குப்பம் அருகே பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்
x
தினத்தந்தி 22 Nov 2021 11:20 AM IST (Updated: 22 Nov 2021 11:20 AM IST)
t-max-icont-min-icon

கே.வி.குப்பம் அருகே பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. வீடுகளும் தண்ணீரில் மூழ்கியது.

கே.வி.குப்பம், நவ.22-
கே.வி.குப்பம் அருகே பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. வீடுகளும் தண்ணீரில் மூழ்கியது.
பாலம் அடித்து செல்லப்பட்டது
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுகா கொத்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில் ஆற்று ஓரத்தில் குடியிருப்புகள் உள்ளன.‌ காமராஜபுரம்- விரிஞ்சிபுரம் இடையே உள்ள தரைப்பாலம் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நேற்று அடித்து செல்லப்பட்டது. 
இதனால் காமராஜபுரம் கரையோர குடியிருப்புகள் சேதமடைந்தது. அங்கிருந்த 5-க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் முழுவதுமாக மூழ்கியும், 8 வீடுகள் பாதி மூழ்கியும், 25-க்கும் மேற்பட்ட வீடுகள் அபாயகரமான நிலையிலும் உள்ளது.
மீட்பு பணி 
இதுகுறித்து தகவல் அறிந்த கே.வி.குப்பம் தாசில்தார் சரண்யா, தனி தாசில்தார் விநாயகமூர்த்தி, துணை தாசில்தார் பலராமன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அங்கு குடியிருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டு, தனியார் மண்டபத்தில் தங்கவைத்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, லத்தேரி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Next Story