கழிவுநீர் கால்வாய் கட்டுமான பணி
உடுமலை நகரில் நடைபெற்று வருகின்ற கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
தளி
உடுமலை நகரில் நடைபெற்று வருகின்ற கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கழிவு நீர் கால்வாய்
உடுமலை நகராட்சி உட்பட்ட பல்வேறு சாலைகளில் கட்டப்பட்டு இருந்த கழிவுநீர் கால்வாய்கள் சேதம் அடைந்து விட்டது. இதனால் அவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. அதைத் தொடர்ந்து பழைய கால்வாய்களை அகற்றி விட்டு புதிதாக கட்டித் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
ஆனால் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது
கழிவுநீர் கால்வாய்கள் புதிதாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.ஆனால் துரிதகதியில் நடைபெறாமல் தொய்வு ஏற்பட்டு வருவதால் வாகன போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்படுவதுடன் நெரிசலிலும் சிக்கி கொள்கிறது.
விரைந்து முடிக்க வேண்டும்
எனவே உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வருகின்ற கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
---
Related Tags :
Next Story