குப்பையால் சுகாதார சீர்கேடு
குப்பையால் சுகாதார சீர்கேடு
தெருவிளக்கு எரியுமா?
திருப்பூர் பழயை பஸ் நிலையம் பகுதியில் கல்நடை மருத்துவமனை மற்றும் பல்வேறு கடைகள் உள்ளன. இந்த பகுதியில் முதல் தெருவில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்கு பல நாட்களாக எரியவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அது மட்டுமல்ல இந்த பகுதியில் 2 டாஸ்மாக் கடை இருப்பதால் மது குடித்து விட்டு மதுப்பிரியர்கள் பாலத்தின் கீழ் படுத்து தூங்குகிறார்கள். அப்போது அறை குறைஆடையுடன் படுத்துக்கிடக்கிறார்கள். மேலும் இந்த பகுதியில் பல்மருத்துவ மனை ஒன்றும் செயல்படுகிறது. இதனால் பெண் குழந்தைகள், பெண்கள், அந்த வழியாக செல்ல பயப்படுகிறார்கள். எனவே தெருவிளக்கை சீரமைக்க வேண்டும். அல்லது தரமான தெருவிளக்கு பொருத்த வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா
குப்பையால் சுகாதார சீர்கேடு
திருப்பூர் போயம்பாளையம் 19வது வார்டு குருவாயூரப்பன் நகர் அங்கன்வாடி எதிரே குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகள் அள்ளப்படாததால் அவை அதிக அளவு குவிந்து கிடக்கிறது. மேலும் குப்பை அள்ளப்படாததால் ஈ மற்றும் கொசு தொல்லை அதிகரித்து விட்டது. குப்பை நீண்ட நாட்கள் அள்ளப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. இதன் அருகில் கோவில் மற்றும் அரசு பள்ளி உள்ளது. எனவே அந்த இடத்தில் குப்பை கொட்டாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுசுகாதார வளாகம் திறக்கப்படுமா
திருப்பூர் மாநகர் ஆத்துப்பாளையம் பகுதி அண்ணா நகரை அடுத்துள்ள முத்துநகர், திருவள்ளுவர் நகரில் உள்ள பொது சுகாதார வளாகம் பூட்டிக்கிடக்கின்றது. இதனால் முத்துநகர், திருவள்ளுவர் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அவரவர் வீடுகளில் கழிவறை வசதி இல்லாததால் அங்குள்ள பொதுசுகாதர வளாகத்தை நம்பி உள்ளவர்கள் தவித்து வருகின்றார்கள். இந்த சுகாதார வளாகம் பயன்பாட்டில் இல்லாததால் கதவுகள் துருப்பிடித்தும் பராமரிப்பு இல்லாமல் பொருட்கள் அனைத்தும் சேதாரமாகியும் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட மாநகராட்சியின் பொதுசுகாதர அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களின் சுகாதாரம் பேணிகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
பல்வேறு பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பொதுமக்களும் கண்டகண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுகிறார்கள். குறிப்பாக நகர் மற்றும் கிராம பகுதிகளில் ஊரையோட்டி சாலையோரம் மரக்கன்றுகள் நடுவதை கைவிட்டு, குப்பைகளை கொட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் சாலையோரம் குப்பை குவிந்து கிடக்கிறது. தாராபுத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் பவர் ஹவுஸ் சாலையோரம் குப்பை குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சாலையோரம் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெருவிளக்கு அமைக்க வேண்டும்
காங்கயம் 17வது வார்டு புலிக்கல்மேடு பகுதியில் மின்கம்பம் நடதப்பட்டுள்ளது. அதன்பின்னர் பலமுறை கூறியும் மின்விளக்கு அமைக்க வில்லை. எனவே பொதுமக்கள் நலன்கருதி நகராட்சி மற்றும் மின்வாரியம் மின்விளக்கு அமைத்து தர வேண்டும்
Related Tags :
Next Story