(திருத்தம்)திருச்செந்தூரில் நேற்று சாலைமறியலுக்கு முயன்ற பொதுமக்களால் பரபரப்பு நிலவியது


(திருத்தம்)திருச்செந்தூரில் நேற்று சாலைமறியலுக்கு முயன்ற பொதுமக்களால் பரபரப்பு நிலவியது
x
தினத்தந்தி 22 Nov 2021 8:48 PM IST (Updated: 22 Nov 2021 8:48 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் நேற்று சாலைமறியலுக்கு முயன்ற பொதுமக்களால் பரபரப்பு நிலவியது

திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் சாலைமறியலுக்கு முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுவன் படுகாயம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 39). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் அகிலேஷ் முத்து (4), சம்பவத்தன்று வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது அந்த வழியாக சென்ற லோடு ஆட்டோ எதிர்பாராதவிதமாக அகிலேஷ்முத்துவின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுவனை திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 தாக்குதல்
இதற்கிடையே ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் லோடு ஆட்டோ டிரைவரான, திருச்செந்தூர் கணேசபுரம் 3-வது தெருவை சேர்ந்த நடராஜன் மகன் முத்துதினேசை தாக்கினர். இதனை தடுக்க முயன்ற அவருடைய நண்பரான நா.முத்தையாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த சிவச்சந்திரனையும் (22) தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சிறுவன் அகிலேஷ்முத்துவின் தந்தை அளித்த புகாரின்பேரில் முத்துதினேஷ் மீது திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோன்று சிவச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், ராஜா, சிவா, சுந்தர் உள்ளிட்ட 6 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சாலைமறியலுக்கு முயன்ற பொதுமக்கள்
இந்த நிலையில் 6 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும், நேற்று திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவில் அப்பகுதி மக்கள் திரண்டு சாலைமறியலுக்கு முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மற்றும் போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு வழங்க சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story