தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 10½ லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்


தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 10½ லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்
x
தினத்தந்தி 22 Nov 2021 9:11 PM IST (Updated: 22 Nov 2021 9:11 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 10½ லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 10½ லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.
கொரோனா தடுப்பூசி
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகின்றன.
அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆரம்ப கட்டத்தில் மந்தநிலையில் இருந்தாலும், தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் முகாம் காரணமாக ஏராளமானவர்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
76.50 சதவீதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்களாக 14 லட்சத்து 5 ஆயிரத்து 800 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர்.
இதில் தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில் 6 லட்சத்து 99 ஆயிரத்து 633 பேரும், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் 3 லட்சத்து 71 ஆயிரத்து 376 பேரும் ஆக மொத்தம் 10 லட்சத்து 71 ஆயிரத்து 9 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இது 76.50 சதவீதம் ஆகும். மீதம் உள்ள 3 லட்சத்து 34 ஆயிரத்து 791 பேருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
தீவிரம்
இதே போன்று தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 410 பேரும், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 959 பேர் ஆக மொத்தம் 4 லட்சத்து 71 ஆயிரத்து 369 பேர் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
இது 35 சதவீதம் ஆகும். தொடர்ந்து முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

Next Story