புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் குளித்த கல்லூரி மாணவர் பலி


புல்லாவெளி  நீர்வீழ்ச்சியில் குளித்த கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 22 Nov 2021 9:30 PM IST (Updated: 22 Nov 2021 9:30 PM IST)
t-max-icont-min-icon

புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் குளித்த கல்லூரி மாணவர் பலியானார்.

பெரும்பாறை:
தேனி மாவட்டம் எழுவனம்பட்டி அருகே உள்ள வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் வெங்கடேசன் (வயது 18). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் இவர் தனது அண்ணன் வேலுவுடன்(20) பெரும்பாறை அருகே புல்லாவெளியில் வசிக்கும் தாத்தா சுப்பிரமணி வீட்டுக்கு வந்தார். 
பின்னர் நேற்று காலை அண்ணன், தம்பி இருவரும் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றனர். அப்போது வெங்கடேசன் திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்ார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story