திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு-நேர் மோதல்
திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு-நேர் மோதி சுகாதார மேற்பார்வையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் பீரகுப்பம் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தவர் சம்பத் (வயது 47). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்தணி ஒன்றியத்தைச் சேர்ந்த கே.ஜி. கண்டிகை, திருத்தணி, இஸ்லாம் நகர், தெக்கலூர், கோரமங்கலம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மெகா தடுப்பூசி பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், திருத்தணியை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துக்கொண்டு இருந்தார். அப்போது பாப்பிரெட்டிப்பள்ளி எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் சம்பத்தின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story