ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகம் முற்றுகை


ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 22 Nov 2021 10:05 PM IST (Updated: 22 Nov 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே அடிப்படை வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஆண்டிப்பட்டி: 

ஆண்டிப்பட்டி ஒன்றியம் டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ.நகர், முத்துகிருஷ்ணாபுரம், சத்யா நகர், டி.வி.ரெங்கநாதபுரம் ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்துதரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கோஷமிட்டனர்.

 இதுகுறித்து தகவலறிந்த ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தங்க கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர்  டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேலுமணி பாண்டியன் முன்னிலையில் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story