போடிமெட்டு மலைப்பாதையில் மண் சரிவு
போடிமெட்டு மலைப்பாதையில் பலத்த மழைக்கு மண் சரிவு ஏற்பட்டது. இதில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
போடி:
போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதன் காரணமாக கேரளாவுக்கு செல்லும் போடிமெட்டு மலைப்பாதையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் பிஸ்கட் பாறை அருகே 7-வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் பாறைகள் உருண்டு விழுந்தன. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதால் நெடுஞ்சாலைத்துறையினர் மூலம் பாறைகளை அகற்ற முடியவில்லை. இதனால் போடிமெட்டு மலைப்பாதையில் போக்குவரத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
Related Tags :
Next Story