விவசாயிகள் மறியல் முயற்சி


விவசாயிகள் மறியல் முயற்சி
x
தினத்தந்தி 22 Nov 2021 11:23 PM IST (Updated: 22 Nov 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆவுடையார்கோவில்:
ஆவுடையார்கோவில் பகுதி எழுநூற்றி மங்களம் வட்டம், பொன்பேத்தி வட்டம், வீரமங்களம் வட்டம், கிடங்கி வயல் வட்டம் மற்றும் பல்வேறு கிராம விவசாயிகளுக்கு 2020-21-ம் ஆண்டிற்கு பயிர் இன்சூரன்ஸ் செய்திருந்தவர்களுக்கு பயிர் காப்பீடு கிடைக்கவில்லை என்று ஏற்கனவே சாலைமறியல் போராட்டம் அறிவித்திருந்தனர். அவர்களுடன் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தி 19-ந்தேதி முடிவு செய்யப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து 19-ந் தேதிக்கு முடிவு சரியில்லாமல் போனதால் மீண்டும் நேற்று சாலைமறியல் செய்ய கிராமமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய சங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் தாசில்தார் அலுவலகம் முன் மறியல் செய்ய முயற்சித்தபோது போராட்டக்காரர்களுடன் ஆவுடையார்கோவில் தாசில்தார் வெள்ளைச்சாமி, ஆவுடையார்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர் வனஜா தேவி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். வருகிற 24-ந் தேதி சென்னையில் இருந்துஇன்சூரன்ஸ் மேலாளர் மணமேல்குடிக்கு பேச்சு வார்த் தைக்கு வருவதாகவும், அன்றய தினம் பேசிக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து  அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story