அரசு பஸ் மோதி எலக்ட்ரீசியன்-பிளம்பர் பலி
போளூரில் அரசு பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற எலக்ட்ரீசியன்- பிளம்பர் பலியானார்கள்.
போளூர்
போளூரில் அரசு பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற எலக்ட்ரீசியன்- பிளம்பர் பலியானார்கள்.
மோட்டார்சைக்கிளில் ெசன்றவர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் கொல்லைமேடு பகுதியில் வசிப்பவர்கள் அருள் (வயது 34), எலக்ட்ரீசியன், பூமிநாதன் (35), பிளம்பர். இருவரும் ஆரணியில் நடந்த கிரகப்பிரவேசத்தில் பங்ேகற்க ஒரு மோட்டார்சைக்கிளில் சாத்தனூரில் இருந்து நேற்று முன்தினம் மாலை புறப்பட்டனர்.
அருள், மோட்டார்சைக்கிளை ஓட்ட பூமிநாதன் பின்னால் அமர்ந்திருந்தார். இரவு 8.30 மணியளவில் போளூர் பை-பாஸ் சாலையில் வந்தபோது, அந்த வழியாக எதிரே வேலூரில் இருந்து திருவண்ணாமலையை நோக்கி வந்த ஒரு அரசு பஸ் திடீரென அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
பரிதாப சாவு
அதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் அருள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பூமிநாதனை அங்கிருந்தவர்கள் மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேேய பூமிநாதன் இறந்து விட்டதாக, கூறினர்.
இந்த விபத்து குறித்து அருள் மனைவி புஷ்பா நேற்று போளூர் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story