மூதாட்டியின் கழுத்தை அறுத்து திருட முயற்சி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 23 Nov 2021 12:05 AM IST (Updated: 23 Nov 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

மூதாட்டியின் கழுத்தை அறுத்து திருட முயன்ற மர்மநர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

க.பரமத்தி
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே குப்பம் நொச்சிக்காட்டூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி மீனாட்சி (வயது 60). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 3 மர்மநபர்கள் அங்கு வந்து மீனாட்சியிடம் பணம், நகை கேட்டு மிரட்டியுள்ளர். அதற்கு மீனாட்சி பணம், நகை இல்லை என கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கத்தியால் மீனாட்சியின் கழுத்தை அறுத்துள்ளனர். அப்போது அங்கிருந்த ஆடு, நாய் கத்தியதால் அருகில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இதைக்கண்ட மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். 
இதையடுத்து பலத்த காயம் அடைந்த மீனாட்சியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story