பா.ஜ.க. இளைஞரணி ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க. இளைஞரணி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2021 12:57 AM IST (Updated: 23 Nov 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் பா.ஜ.க. இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர், 
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. இளைஞரணி சார்பில் பெட்ரோல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞர் அணி தலைவர்கள் சீதாராமன், பூமாலைராஜா, மகளிர் அணி தலைவி காளீஸ்வரி சந்தனமாரி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாநில இளைஞரணி துணை தலைவர் சிவபாலன், முன்னாள் ராணுவ வீரர் அணித்தலைவர் பாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் கஜேந்திரன், மேற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட தொடர்புத் துறைதுணைத்தலைவர் பாண்டுரங்கன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Next Story