கன்னட இலக்கியத்திற்கு பெரிய பங்களிப்பை அளித்தவர் கனகதாசர் - பசவராஜ் பொம்மை புகழாரம்
கன்னட இலக்கியத்திற்கு பெரிய பங்களிப்பை அளித்தவர் கனகதாசர் என்று பசவராஜ் பொம்மை புகழாரம் சூட்டினார்.
பெங்களூரு:
மனிதநேய குணங்கள்
கர்நாடக அரசின் கன்னட வளர்ச்சித்துறை சார்பில் கனகதாசர் ஜெயந்தி நிழ்ச்சி நடைபெற்றது. பெங்களூரு எம்.எல்.ஏ.க்கள் பவன் வளாகத்தில் உள்ள கனகதாசர் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கன்னட இலக்கதிற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர் கனகதாசர். அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. மனித சமூகம் உலகத்திற்கு சொந்தமானது என்ற சிந்தனையை கொண்டவர். மனிதநேய குணங்களை விதைத்தார். சமத்துவத்தை வலியுறுத்தினார். சிக்காவியில் பிறந்து காகினெலேயில் வாழ்ந்தார். அவர் மனித வாழ்க்கையின் சாராம்சத்தை எடுத்துரைத்தார். அவர் பல்வேறு இலக்கியங்களை உருவாக்கி நமக்கு கொடையாக வழங்கினார்.
கனகதாசரின் சிந்தனைகள்
அவருடைய தத்துவங்கள் இன்றும் மனித சமூகத்திற்கு வழிகாட்டியாக உள்ளது. அதன் மூலம் அவர் சமூகத்தில் சாந்தி, சமத்துவம், வளர்ச்சியை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டார். கனகதாசரின் சிந்தனைகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் பொருட்டு காகினெலே பகுதியில் அரண்மனை, நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
அதே போல் சங்கொள்ளி ராயண்ணா பிறந்த ஊரில் அவரது சமாதி, அருங்காட்சியாகம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சங்கொள்ளி ராயண்ணா பெயரில் ராணுவ பள்ளி ரூ.230 கோடியில் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த பள்ளியை ராணுவத்துறை கர்நாடக அரசிடம் ஒப்படைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story