வார்டுகள் மறுவரையறை குளறுபடிகளை நீக்கக்கோரி காயல்பட்டினத்தில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது
வார்டுகள் மறுவரையறை குளறுபடிகளை நீக்கக்கோரி காயல்பட்டினத்தில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது
ஆறுமுகநேரி:
வார்டுகள் மறுவரையறை குளறுபடிகளை நீக்கக்கோரி காயல்பட்டினத்தில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வார்டுகள் மறுவரையறை
2017-ம் ஆண்டு அரசு எடுத்துள்ள வார்டுகள் மறுவரையறைப்படி காயல்பட்டினத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதில் பல்வேறு குளறுபடிகளும், குழப்பங்களும், நிர்வாக வசதியின்மையும் உள்ளதாகவும், அதனை சீர்செய்ய வேண்டும் அல்லது 2011-ஆம் ஆண்டு வார்டு வரையறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், காயல்பட்டினம் நகரசபை ஆகிய நிர்வாகத்தினருக்கு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையினர் மற்றும் பொது அமைப்புகள் மனு கொடுத்தனர்.
கடையடைப்பு
ஆனாலும் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறியும், கோரிக்கையை வலியுறுத்தியும், அரசுக்கு கவனஈர்ப்பு செய்வதற்காகவும், வார்டுகள் மறுவரையறை குளறுபடிகளை நீக்கக்கோரியும் நேற்று காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பு நடந்தது.
இதில் நடப்பது என்ன, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டுதல் அமைப்பு, அனைத்து ஜமாத், பொது அமைப்புகள், காங்கிரஸ், அ.தி.மு.க., முஸ்லிம் லீக், மக்கள் ஜனநாயக கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன. இதனால் அனைத்து கடைகளும் மூடிக்கிடந்தன. பஜார் வெறிச்சோடி காணப்பட்டது. மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. அவசர தேவைகளுக்கு மட்டுமே ஆட்டோக்களும் சென்று வந்தன. காயல்பட்டினம் பஜாரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஆர்ப்பாட்டம்
மாலையில் காயல்பட்டினம் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story