திருவள்ளூர் அருகே அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட புரட்சி பாரதம் கட்சியினர் 140 பேர் மீது வழக்கு


திருவள்ளூர் அருகே அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட புரட்சி பாரதம் கட்சியினர் 140 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 23 Nov 2021 7:54 PM IST (Updated: 23 Nov 2021 7:54 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட புரட்சி பாரதம் கட்சியினர் 140 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம் விரிஞ்சிபுரம் தரைப்பாலம் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள காமராஜ் நகர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மழைநீர் புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் கே.வி. குப்பம் எம்.எல்.ஏ.வும், புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான பூவை ஜெகன்மூர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று அரசு அதிகாரிகள் வந்து யாரும் நிவாரணம் வழங்கவில்லை என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். 

இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து திருவள்ளூர், வெள்ளவேடு, திருவாலங்காடு பகுதியில் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து திருவள்ளூர் டவுன், வெள்ளவேடு மற்றும் திருவாலங்காடு போலீசார் அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் 140 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story