பலத்த மழை காரணமாக ஊட்டியில் மண்சரிவு


பலத்த மழை காரணமாக ஊட்டியில் மண்சரிவு
x
தினத்தந்தி 23 Nov 2021 8:33 PM IST (Updated: 23 Nov 2021 8:33 PM IST)
t-max-icont-min-icon

பலத்த மழை காரணமாக ஊட்டியில் மண்சரிவு

ஊட்டி

ஊட்டியில் பெய்த பலத்த மழை காரணமாக மண் சரிந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. 

விடிய விடிய மழை 

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பல்வேறு இடங்களில் விடிய, விடிய இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

 தொடர் மழை காரணமாக ஊட்டி ஆயுதப்படை வளாகத்தில் இருந்து புதுமந்து போலீஸ் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் விவசாய நிலத்தில் இருந்து மண்சரிந்து விழுந்தது. சாலையின் குறுக்கே மண் குவிந்து கிடந்ததால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.  போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

மண் சரிவு 

இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் கிடந்த மண்ணை அப்புறப்படுத்தினார்கள். மேலும் அதே பகுதியில் மற்றொரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். 

அதுபோன்று பந்தலூர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக நெலாக் கோட்டை-பாட்டவயல் செல்லும் சாலையில் மூங்கில் மரங்கள் சரிந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் அங்கு வந்து அந்த மரங்களை வெட்டி அகற்றி னார்கள். 


Next Story