தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனை தொற்று உறுதி செய்யப்படாததால், கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது


தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனை தொற்று உறுதி செய்யப்படாததால், கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது
x
தினத்தந்தி 23 Nov 2021 9:03 PM IST (Updated: 23 Nov 2021 9:03 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனை தொற்று உறுதி செய்யப்படாததால், கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதன் மூலம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளதுது.
கொரோனா வைரஸ்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா முதல் அலை தொடங்கி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு படிப்படியாக கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரோனா 2-வது அலை ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கியது. இதனால் பலர் கொரோனாவுக்கு பலியானார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலும் படிப்படியாக கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே வந்தது. அதிகபட்சமாக ஒரே நாளில் 400 பேர் வரை பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு அந்த பாதிப்பு மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் விரைவு படுத்தப்பட்டதால் கொரோனா பரவல் கட்டுக்குள் வரத் தொடங்கியது. ஆனாலும் தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
தொற்று இல்லை
இந்த நிலையில் 8 மாதங்களுக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56 ஆயிரத்து 468 ஆக உள்ளது. நேற்று 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து 56 ஆயிரத்து 3 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 55 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 410 ஆக உள்ளது.


Next Story