அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதம்


அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 23 Nov 2021 10:18 PM IST (Updated: 23 Nov 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

தேனி:

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது.

உண்ணாவிரதத்துக்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தேனி கிளை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மத்திய சங்க செயலாளர் கணேஷ்ராம் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். மத்திய சங்க பொதுச்செயலாளர் ராமநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். மத்திய சங்க செயலாளர் சுரேஷ்குமார், கிளை செயலாளர் பாக்கியச்செல்வன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் போடி, பெரியகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பும் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தந்த கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Next Story