ஆவணங்களை திருடிய தம்பதி மீது வழக்கு


ஆவணங்களை திருடிய தம்பதி மீது வழக்கு
x
தினத்தந்தி 23 Nov 2021 10:53 PM IST (Updated: 23 Nov 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

உறவினர் வீட்டில் ஆவணங்களை திருடிய தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தேனி:

தேனி அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் போஸ் (வயது 67). இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது தனது வீட்டின் சாவியை, அதே ஊரில் வசிக்கும் தனது உறவினர் ஜெயச்சந்திரனிடம் கொடுத்து சென்றார்.

 இந்தநிலையில் அந்த வீட்டில் வைத்து இருந்த போசுக்கு சொந்தமான சொத்து ஆவணங்களை ஜெயச்சந்திரன் மற்றும் அவருடைய மனைவி காயத்ரி திருடி நம்பிக்கை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் போஸ் புகார் செய்தார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் ஜெயச்சந்திரன், காயத்ரி ஆகிய 2 பேர் மீது குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story