ஆம்பூர் பகுதியில் தரைப்பாலங்கள் சேதமடைந்ததால் 100 கிராமங்கள் துண்டிப்பு


ஆம்பூர் பகுதியில் தரைப்பாலங்கள் சேதமடைந்ததால் 100 கிராமங்கள் துண்டிப்பு
x
தினத்தந்தி 23 Nov 2021 11:29 PM IST (Updated: 23 Nov 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளப்பெருக்கால் ஆம்பூர் பகுதியில் தரைப்பாலங்கள் சேதம் அடைந்து 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

ஆம்பூர்

வெள்ளப்பெருக்கால் ஆம்பூர் பகுதியில் தரைப்பாலங்கள் சேதம் அடைந்து 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

வெள்ளப்ெபருக்கு

ஆம்பூர் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மாதனூர் தரைப்பாலம் உடைந்தது. இதனால் மாதனூரிலிருந்து குடியாத்தம் செல்லும் பொதுமக்கள் பள்ளிகொண்டா வழியாக சென்று வருகின்றனர். இதேபோல் ஆம்பூர் பச்சகுப்பம் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, குடியாத்தம் செல்லும் வழியில் உள்ள ரெட்டிமாங்குப்பம், அழிஞ்சிகுப்பம், மேல்வழித்துணையாங்குப்பம். மேல்பட்டி, கீழ்பட்டி வளத்தூர் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 
நரியம்பட்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக ஆம்பூரிலிருந்து நரியம்பட்டு வழியாக குடியாத்தம் செல்ல முடியாத நிலைஉள்ளது.

நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளால் தேவலாபுரம், துத்திப்பட்டு, பெரியவரிக்கம் கிராமங்களுக்குள் வெங்க டசமுத்திரம் ஏரி உபரி நீர் கிராமங்களில் புகுந்தது. குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற வழியில்லாததால் கிராமங்களில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பயன் படுத்தும் சாலைகளை பொக்லைன் வாகனம் மூலம் உடைத்து கால்வாய்போல வெட்டி தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

போக்குவரத்து துண்டிப்பு

அதன் காரணாக மேற்கண்ட பகுதி பொதுமக்கள் ஆம்பூர் குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு செல்ல முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பாலாறு, கானாறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும், கானாறு, தரைப்பாலங்கள் சேதமடைந்து துண்டிக்கப்பட்டதாலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்களும் தோல் மற்றும் காலணி தொழிற்சாலைகளுக்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்களும், அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொலைதூரம் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story