வையப்பமலை அருகே, சாலை வசதி கோரி நாற்று நட்டும், உருளு தண்டம் போட்டும் பொதுமக்கள் நூதன போராட்டம்


வையப்பமலை அருகே, சாலை வசதி கோரி நாற்று நட்டும், உருளு தண்டம் போட்டும் பொதுமக்கள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2021 11:59 PM IST (Updated: 23 Nov 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

வையப்பமலை அருகே சாலை வசதி கோரியும், நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்த கோரியும் நாற்று நட்டும், உருளு தண்டம் போட்டும் பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் நூதன போராட்டம் நடத்தினர்.

எலச்சிபாளையம்:
வையப்பமலை அருகே சாலை வசதி கோரியும், நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்த கோரியும் நாற்று நட்டும், உருளு தண்டம் போட்டும் பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் நூதன போராட்டம் நடத்தினர்.
நாற்று நட்டு போராட்டம்
திருச்செங்கோடு தாலுகா வையப்பமலை அருகே குப்பிச்சிபாளையம் ஊராட்சி செக்காரப்பட்டியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த  பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக மழைநீர் குட்டை போல் தேங்கி பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டன. மேலும் வாகனங்களில் செல்ல முடியாதவாறு குட்டை போன்றே தண்ணீர் எந்தநேரமும் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வந்தனர். 
இந்த நிலையில் இது குறித்து பல்வேறு துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. குப்பிச்சிபாளையம் கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரிடம் இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் மனு கொடுத்தனர். 
இருப்பினும் அதன்பேரிலும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் செக்காரப்பட்டி பகுதி மக்களுடன் ஒன்றிணைந்து தேங்கி நிற்கும் மழை நீரில் நாற்று நட்டு  போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
உருளு தண்டமும் போட்டனர்
இதைத்தொடர்ந்து மழைநீரில் உருண்டு கொண்டு உருளுதண்டம் போட்டும் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேங்கி நின்ற அந்த தண்ணீரில் சோப்பு போட்டு குளித்து கொண்டிருந்தனர்.
நூதனமுறையில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு கட்சியின் கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலர்கள் சுரேஷ், பூபதிமுருகன் ரமேஷ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனர் மாரிமுத்து, எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
பின்னர் போராட்டக்காரர்கள் ஊராட்சி மன்ற தலைவர் வராமல் போராட்டத்தை வாபஸ் பெற முடியாது என சுமார் ஒரு மணி நேரமாக போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் நேரில் வந்து உடனடியாக பணிகளை தொடங்குவதாகவும், கால தாமதம் செய்யாமல் சாலை அமைத்து தருகிறேன் எனவும் உறுதி கூறினார். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த நூதன போராட்டம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story