நீதிமன்றத்தில் போலி ஆவணம் தாக்கல் செய்த 3 பேர் கைது


நீதிமன்றத்தில் போலி ஆவணம் தாக்கல் செய்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 24 Nov 2021 12:37 AM IST (Updated: 24 Nov 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

நீதிமன்றத்தில் போலி ஆவணம் தாக்கல் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் மோசடி வழக்கில் கைதான 2 பேருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததில் போலி ஆவணம் தாக்கல் செய்தது தொடர்பாக டவுன் போலீஸ் நிலையத்தில் கோர்ட்டு கிளார்க் புகார் தெரிவித்திருந்தார். அதில், சம்பந்தப்பட்ட ஜாமீன்தாரர்கள் பிரமாண பத்திரத்தில் கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழை போலியாக தயார் செய்யப்பட்டிருந்ததை குறிப்பிட்டிருந்தனர். அதன்படி போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த சான்றிதழை கிராம நிர்வாக அலுவலர் கையெழுத்து மற்றும் பெயரை மாற்றி போட்டு புதுக்கோட்டை காந்தி நகரை சேர்ந்த அபூர்வம் (வயது 60) தயாரித்தது தெரிய வந்தது. இதையடுத்து அபூர்வம் மற்றும் அந்த சான்றிதழை ஜாமீன்தாரருக்காக கோர்ட்டில் கொடுத்த காந்திநகரை சேர்ந்த குணசேகரன் (67), தமிழ்மணி (65) ஆகியோரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.


Next Story