காரை உடைத்து ரகளை செய்த 6 வாலிபர்கள் கைது


காரை உடைத்து ரகளை செய்த 6 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 24 Nov 2021 12:44 AM IST (Updated: 24 Nov 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் காரை உடைத்து ரகளை செய்த 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆவூர்
விராலிமலை தாலுகா, ஆலங்குளத்தில் உள்ள கடைவீதியில் அப்பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் பல நாட்களாக மாலை நேரத்தில் மதுபோதையில் கடைகளில் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்து வருவதாக போலீசாருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த பிச்சை மனைவி சரஸ்வதி (வயது 50) என்பவர் தனது மகனுடன் நேற்று முன்தினம் விராலிமலை சென்றுவிட்டு இரவு 9.30 மணியளவில் வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு கடை வீதியில் மதுபோதையில் நின்றுகொண்டு தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சூரியூர் முருகேசன் மகன் பாலசுப்பிரமணி (வயது 23), திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா சொக்கம்பட்டி அழகு மகன் மணிகண்டன் (23), சூரியூர் பழனிசாமி மகன் உதயகுமார் (21), எழுவம்பட்டி முருகேசன் மகன் தமிழரசன் (21), செம்புலிங்கம் மகன் கோபிநாத் (20), அருவங்கால்பட்டி கருப்பையா மகன் லெட்சுமணன் (21) ஆகிய 6 பேரும் சரஸ்வதி, சுரேஷ்குமார் ஆகியோர் வந்த காரை வழிமறித்து கதவை உடைத்து அவர்களை வெளியே வருமாறு தகாத வார்த்தையில் பேசி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
6 பேர் கைது
 இதுகுறித்த புகாரின்பேரில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி ஆகியோர் நேற்று காலை ஆலங்குளம் வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாத்தூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மதுபோதையில் கடைவீதியில் நின்றுகொண்டு ரகளையில் ஈடுபட்ட பாலசுப்பிரமணி உள்பட 6 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Next Story