மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2021 1:01 AM IST (Updated: 24 Nov 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டம் 
வத்திராயிருப்பு வருவாய் துறை அலுவலகம் முன்பு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசாணை 41- ன்படி 40 சதவீதம் ஊனம் இருந்தாலும் மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். மாற்றுத்தினாளிகளை அலைகழிக்கக்கூடாது.
குறைதீர்க்கும் கூட்டம் 
 கோட்டாட்சியர் அலுவலகங்களில் மாதந்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி அடையாள அட்டை, உதவி தொகை மற்றும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இதில் மாநில செயலாளர் முத்து காந்தாரி, மாவட்ட செயலாளர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் சுந்தரபாண்டியன், சி.ஐ.டி.யு. ஜெயக்குமார், விவசாயத் தொழிற்சங்க தலைவர் பெனரி, விவசாய சங்க மாவட்ட தலைவர் மணிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story