கச்சேரி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா


கச்சேரி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
x
தினத்தந்தி 24 Nov 2021 1:01 AM IST (Updated: 24 Nov 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

கச்சேரி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.

பெரம்பலூர்:
சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டால் மனதில் உள்ள சங்கடங்கள் விலகும் என்பது ஐதீகம். இதனை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு பவுர்ணமி முடிந்த 4-வது நாள் சங்கடகர சதுர்த்தி விழா நடத்தப்படுகிறது. இதன்படி பெரம்பலூரில் பழைய பஸ் நிலையம் அருகே தினசரி காய்கறி மார்க்கெட் தெருவில் உள்ள கச்சேரி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நேற்று நடந்தது.
இதனை முன்னிட்டு விநாயகர் மூலவர் சிலைக்கு பால், பழ வகைகள், சந்தனம், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகமும், ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் இடையே தீபாராதனையும் நடந்தது. இதைத்தொடர்ந்து விநாயகருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு கணபதி வழிபாடும், மகா ஆரத்தியும் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story