மளிகை கடைக்காரருக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது


மளிகை கடைக்காரருக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 24 Nov 2021 1:21 AM IST (Updated: 24 Nov 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

மளிகை கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள ரம்மதபுரம் நடுவூரை சேர்ந்தவர் ஞானசேவியர் (வயது 43). சென்னை முதலிவாக்கத்தில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். மிட்டாதார்குளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் டேவிட் ராஜ் (22). இவர் முதலிவாக்கத்தில் உள்ள சிமெண்டு கடையில் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் உறவினர்கள். இவர்களுக்கு முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் ஞானசேவியர் மளிகை கடையை டேவிட் ராஜ் தீ வைத்து எரித்து விட்டதாக கொடுத்த புகாரின் பேரில், மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று ரம்மதபுரம் பஸ் நிறுத்தத்தில் ஞானசேவியர் நின்றபோது அங்கு வந்த டேவிட் ராஜ் அவரை அடித்து உதைத்து, மாங்காடு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரை வாபஸ் பெறாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து டேவிட்ராஜை கைது செய்தார்.

Next Story