கொலை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி


கொலை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
x
தினத்தந்தி 24 Nov 2021 1:22 AM IST (Updated: 24 Nov 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

கொலை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது

புதுக்கோட்டை
திருச்சி மாவட்டம், நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன் (வயது 55). இவர் கடந்த 20-ந் தேதி இரவு நேர ரோந்து பணியில் இருந்த போது ஆடு திருடி வந்த 3 பேரை மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று பிடிக்க முயன்ற போது கீரனூர் அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கொலையான சப்-இன்ஸ்பெக்டருக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி புதுக்கோட்டை பெரியார் நகரில் நேற்று மாலை நடைபெற்றது. அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டன. இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், போலீசார் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.


Next Story