தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் வடியாததால் பொதுமக்கள் அவதி
தொடரும் மழையால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் வடியாததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். தண்ணீர் சூழ்ந்த வீட்டின் மாடியில் தவித்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
திருச்சி, நவ.24-

பலத்த மழை
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு, விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் வீடுகளின் முன்பு தேங்கிய மழைநீர் வடியாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும், பெரும்பாலான சாலைகளும் சேதம் அடைந்துள்ளன. இந்தநிலையில் நேற்று பகல் 3.30 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இதில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மூதாட்டி தவிப்பு
இதற்கிடையே திருச்சி ஜே.கே.நகர் பகுதியில் ஒருவாரத்துக்கும் மேலாக மழைநீர் வடியவில்லை. இதனால் வயதானவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகிறார்கள். அந்த பகுதியில் ஒரு வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் முதல்மாடியில் தவித்த வள்ளியம்மாள் (வயது 95) என்ற மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படுக்கை மூலம் மீட்டு கொண்டு வந்தனர்.

Related Tags :
Next Story