கிருஷ்ணகிரிமாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் விடுதி மேற்பார்வையாளர் உள்பட 3 பேர் தற்கொலை


கிருஷ்ணகிரிமாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் விடுதி மேற்பார்வையாளர் உள்பட 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 24 Nov 2021 5:39 AM GMT (Updated: 24 Nov 2021 5:39 AM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் விடுதி மேற்பார்வையாளர் உள்பட 3 பேர் தற்ெகாலை செய்து கொண்டனர்.

காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் விடுதி மேற்பார்வையாளர் உள்பட 3 பேர் தற்ெகாலை செய்து கொண்டனர்.
விடுதி மேற்பார்வையாளர்
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தூயவன் (வயது 21). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் மேற்பார்வையாளராக இருந்து வந்தார். இவருக்கு மது, புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது. இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். 
இனால் மனமுடைந்த தூயவன் கடந்த 21-ந் தேதி தான் பணிபுரிந்த தங்கும் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விடுதி ஊழியர்கள் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டிரைவர்- தொழிலாளி
ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள கோவிந்தராஜ் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (60). டிரைவர். இவருக்கு கடன் தொல்லை இருந்தது. இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூளகிரி அருகே உள்ள சின்ன பாப்பனப்பள்ளியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணன் (35). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் விஷத்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.
இதையடுத்து முனிகிருஷ்ணனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர, சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story