மாவட்ட செய்திகள்

போந்தவாக்கம் கிராமத்தில் விவசாயிக்கு கத்திக்குத்து - தம்பிக்கு வலைவீச்சு + "||" + Screaming at the farmer in the village of Ponthavakkam - web for Brother

போந்தவாக்கம் கிராமத்தில் விவசாயிக்கு கத்திக்குத்து - தம்பிக்கு வலைவீச்சு

போந்தவாக்கம் கிராமத்தில் விவசாயிக்கு கத்திக்குத்து - தம்பிக்கு வலைவீச்சு
போந்தவாக்கம் கிராமத்தில் விவசாயியை கத்தியால் குத்திய தம்பியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், போந்தவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது 2-வது மனைவிக்கு பிறந்தவர் லோகநாதன்(வயது 28). நேற்று முன்தினம் குடிபோதையில் வீதியில் சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். முருகேசனின் முதல் மனைவிக்கு பிறந்தவர் மணிகண்டன்(38) விவசாயி. இவர் லோகநாதனை எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த லோகநாதன், மணிகண்டனை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்று விட்டார்.

இதில், படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மணிகண்டனை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மணிகண்டனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து முருகேசன் ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லோகநாதனை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிக்கு கத்திக்குத்து
விவசாயிக்கு கத்திக்குத்து