மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வாகன உதிரிபாகங்கள் திருட்டு - 6 பேர் கைது + "||" + Auto parts theft at Gummidipoondi Chipkot industrial estate - 6 arrested

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வாகன உதிரிபாகங்கள் திருட்டு - 6 பேர் கைது

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வாகன உதிரிபாகங்கள் திருட்டு - 6 பேர் கைது
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வாகன உதிரிபாகங்களை திருடிய ஊழியர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து அடிக்கடி வாகன உதிரிபாகங்கள் திருட்டுபோவதாக நிர்வாகத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதுதொடர்பாக தொழிற்சாலை ஊழியர்களான பெரிய ஓபுளாபுரம் கிராமத்தை சேர்ந்த வினோத் (வயது 31), பல்லவாடாவை சேர்ந்த ரகுபதி (26), வேன் டிரைவர்களான சுண்ணாம்பு குளத்தை சேர்ந்த பார்த்திபன் (31) சுகுமார் (31) மற்றும் பொருட்களை வாங்கிய நபர்களான பண்பாக்கத்தை சேர்ந்த ராமு (40), மனோகர் (35) ஆகிய 6 பேரை நேற்று கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வாகன என்ஜின் உதிரி பாகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.