மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது + "||" + Private employment camp to be held in Thoothukudi tomorrow

தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது

தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
வேலைவாய்ப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.
முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம்.
கல்வி சான்று
மேற்கண்ட தகுதியுள்ள, தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. தனியார் நிறுவனத்தினரும் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0461-2340159 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் பேச்சியம்மாள் தெரிவித்து உள்ளார்.