கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ஒரு லட்சத்து 65 ஆயிரத்தை திருடிட மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்
கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ஒரு லட்சத்து 65 ஆயிரத்தை திருடிட மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள முடுக்குமீண்டான்பட்டி கிராமம் வடக்குத் தெருவில் குடியிருப்பவர் ஆவுடையப்பன் மகன் காளியப்பன் (வயது 44). இவர் மின் கோபுரம் அமைக்கும் ஒப்பந்ததாரர். சம்பவத்தன்று காளியப்பன் தனது மோட்டார் சைக்கிளில் உள்ள சீட்டுக்கு கீழ்புறம் உள்ள லாக்கரில் ரூ.1.65 லட்சத்தை வைத்து பூட்டியுள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளை கோவில்பட்டி ஏ.கே.எஸ். தியேட்டர் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் வளாகத்தில் நிறுத்திவிட்டு, ஒருவரை சந்திக்க சென்றார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணம் திருடப்பட்டு இருந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த காளியப்பன், கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் ைசக்கிளில் பணத்தை திருடிச்ெசன்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story