மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விடிய, விடிய சாரல் மழை பெய்தது + "||" + Thoothukudi, Nellai and Tenkasi districts received heavy rain in the morning and early morning

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விடிய, விடிய சாரல் மழை பெய்தது

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விடிய, விடிய சாரல் மழை பெய்தது
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விடிய, விடிய சாரல் மழை பெய்தது
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் விடிய, விடிய சாரல் மழை பெய்தது.
சாரல் மழை
வடகிழக்கு பருவமழை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மாவட்டங்களில் நேற்று முன்தினம் காலை முதல் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய, விடிய பெய்து, நேற்று வரை நீடித்தது. 
நெல்லை மாவட்டத்தில் அம்பை, பாபநாசம், மணிமுத்தாறு, ராதாபுரம், மூைலக்கரைப்பட்டி, களக்காடு, தென்காசி, ஆய்க்குடி, செங்கோட்டை, சங்கரன்கோவில், சிவகிரி உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. 
நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து. இதனால் பொதுமக்கள் குடை பிடித்தபடி வெளியே சென்றனர். சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் குளம் போல் தேங்கியதால், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
அணைகள்
மேலும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக உள்ளது. பாபநாசம் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 1,158 கனஅடி நீர்வந்து கொண்டு இருந்தது. 1,405 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து காரணமாக அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. தற்போது பாபநாசம் அணை நீர்மட்டம் 138.40 அடியாக உள்ளது. 
இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 140.91 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 93.15 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை 27 அடியாகவும், நம்பியாறு அணை 22.96 அடியாகவும் உள்ளது. 
கடனாநதி அணை நீர்மட்டம் 82.60 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 68.20 அடியாகவும், அடவிநயினார் அணை 131.75 அடியாகவும், குண்டாறு 36.10 அடியாகவும் உள்ளது. இந்த அணைகள் ஏற்கனவே நிரம்பியதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.
தூத்துக்குடி
இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை விடிய விடிய சாரல் மழை பெய்தது. இந்த மழையால் தூத்துக்குடி பிரையண்ட்நகர் பகுதியில் சாைலகளில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. அதே போன்று பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லக்கூடிய தற்காலிக பஸ் நிலையம் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. 
மழை அளவு
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பாபநாசம்-10, சேர்வலாறு-12, மணிமுத்தாறு-8, கொடுமுடியாறு-10, அம்பை-6, சேரன்மாதேவி-6, ராதாபுரம்- 2, மூைலக்கரைப்பட்டி-10, நாங்குநேரி- 10, களக்காடு-6, கடனாநதி-6, அடவிநயினார்-31, குண்டாறு-8, ஆய்க்குடி- 46, செங்கோட்டை-11, தென்காசி-15, சங்கரன்கோவில்-57, சிவகிரி-12, திருச்செந்தூர்-27, காயல்பட்டினம்-26, குலசேகரன்பட்டினம்- 14, விளாத்திகுளம்- 16, காடல்குடி- 14, வைப்பார்- 22, சூரங்குடி 45, கோவில்பட்டி- 6, கழுகுமலை- 28, கயத்தார்- 13, கடம்பூர்- 28, ஓட்டப்பிடாரம்- 5, மணியாச்சி 22, வேடநத்தம்- 15, கீழஅரசடி- 7, எட்டயபுரம்- 11.4, சாத்தான்குளம்- 13.4, ஸ்ரீவைகுண்டம்- 10.5, தூத்துக்குடி- 13.4. 

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் நேற்று பெய்த மழைக்கு திருச்செந்தூர் கோவில் கடற்கரை தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது
தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் நேற்று பெய்த மழைக்கு திருச்செந்தூர் கோவில் கடற்கரை தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது
2. தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதியில் கனமழை பெய்து வருவதால் நகரிலுள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதி
தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதியில் கனமழை பெய்து வருவதால் நகரிலுள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
3. தூத்துக்குடி, நாசரேத் திருமண்டலத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்க சென்றபோது மோதல், கைகலப்பு
தூத்துக்குடி, நாசரேத் திருமண்டலத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்க சென்றபோது மோதல், கைகலப்பு ஏற்பட்டது
4. விளைந்த நெல்லை கொள்முதல் செய்து விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டும்
விளைந்த நெல்லை கொள்முதல் செய்து விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டும் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.
5. பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி, கோவில்பட்டியில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.