மாவட்ட செய்திகள்

ஆசிரியர் வீட்டில் நகைகள் திருட்டு + "||" + Gold chain theft in teacher house

ஆசிரியர் வீட்டில் நகைகள் திருட்டு

ஆசிரியர் வீட்டில் நகைகள் திருட்டு
உடுமலையில் ஆசிரியர் வீட்டில் நகை 3 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
தளி, 
உடுமலையில் ஆசிரியர் வீட்டில் நகை 3 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
ஆசிரியர் வீடு
உடுமலை ராமசாமி நகரை சேர்ந்தவர் ஜெயசீலன் வயது 41. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 
இவர் கடந்த 19ந் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு சென்று விட்டார். பின்னர் கடந்த 21ந்தேதி இரவு 8 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.
3 பவுன் நகை திருட்டு
 அப்போது பூஜை அறை மற்றும் படுக்கை அறைகள் கலைந்து கிடந்தது. அத்துடன் பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் இருந்த ஒரு பவுன் தங்கத்தோடு 2 பவுன் நெக்லஸ் உள்ளிட்டவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றதும் தெரியவந்தது.
 இது குறித்து ஜெயசீலன் உடுமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த உடுமலை போலீசார் 3 பவுன் நகைளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.