விபத்தில் டிரைவர் உள்பட 14 பேர் காயம்
அவினாசி அருகே சாலை தடுப்புச் சுவரில் அரசு பஸ் மோதி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர்.
அவினாசி
அவினாசி அருகே சாலை தடுப்புச் சுவரில் அரசு பஸ் மோதி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
விபத்து
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவைக்கு நேற்று இரவு அரசு சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 42 பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் ராகவன்வயது 45 ஓட்டி வந்தார். இந்த பஸ் நேற்று அதி காலை 4 மணியளவில் திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த எம்.நாதம் பாளையம் பிரிவு 6 வழி ச்சாலை மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. பயணிகள் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி பாலத்தின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ் பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் அங்கு வந்தனர்.
14 பேர் காயம்
பின்னர் விபத்தில் காயம் அடைந்த 14 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாலை நேரம் என்பதால் டிரைவர் ராகவன்தூக்கக்கலக்கத்தில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றுகூறப்படுகிறது. இது குறித்து அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் இந்த விபத்து காரணமாக ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதையடுத்து கிரேன் மூலம் கவிழ்ந்து கிடந்த வந்த பஸ் அப்புறப்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story